அன்பின் சிறு பொழுதுகள்

மனிதர்களுக்கிடையே நிகழும் அன்பின், காதலின், பிரிவின், மகிழ்ச்சியின் என பல்வேறு உணர்வுகளை எளிய கவிதைகளாகச் சொல்கிறது - அன்பின் சிறு பொழுதுகள். அன்பின் வெவ்வேறு தருணங்களை ஆர்பாட்டமில்லாமல் அழகாக வெளிப்படுத்துகின்றன, பல கவிதைகளின் சிறு வரிகள். எளிய வரிகளின் வழி கவித்துவத்தைக் கண்டடையும் முனைப்போடு இக்கவிதைகள் வெளிப்படுகின்றன. அன்பு என்பதே இவ்வுலகை நகர்த்தும் ஒற்றைச் சொல் என்று சொல்ல முனைகிறது இத்தொகுப்பு.

Little Moments of Love

This book examines love, separation, togetherness and all other possible feelings between lovers. Simple words create poetic magic in most of the poems in this collection. This book conveys that in this fast paced world, we do have space for care and love. It stresses that love is the key thing that moves this world!

Goldfish Publications
2021

ABOUT THE AUTHOR

பாலு மணிமாறன்

பாலு மணிமாறன், எழுத்தாளர், பதிப்பாளர், தமிழ் அமைப்புகளின் வழி செயல்படுபவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழில் எழுதி வருகிறார். அலையில் பார்த்த முகம் , சக பயணிகளோடு சிறு உரையாடல்கள் , அன்பின் சிறு பொழுதுகள் , 14ஆம் மாடிக் குடியிருப்பென்பது ஆகிய நான்கு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். எழுத்தாளர்களை அடையாளம் காட்டிய தங்கமீன் கலை இலக்கிய வட்டத்தைப் பத்து ஆண்டுகளுக்கு மேல் வழிநடத்தி வருகிறார்.

Balu Manimaran

Balu Manimaran is a publisher and editor who has written in Tamil for more than 30 years. He has published four poem collections: Alayil Partha Mugam, Saga Payanigalodu Sila Urayadalgal, Anbin Siru Pozhuthugal and 14m maadi kudiyiruppenpathu (literal translations). He runs the Thangameen Arts and Literature club which has groomed many Tamil writers.