லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள்
லயாங் லயாங் பறவைகள் நூலிலுள்ள கவிதைகள் நிலத்தை விடுத்து நிலமற்ற நிலத்தின் உண்மைகள், இயற்கையின் வலிகள், உண்மைகள் மற்றும் அர்த்தங்களைப் பற்றியது. வலசைப் பறவைகளுக்கே இருக்கக் கூடிய பயத்தையும் கூச்சத்தையும் மறைத்துக் கொண்டு இடம் மாறி வந்த தேசத்தின் ஆழத்தை எழுத்தில் காட்டுவதை நோக்கமாகக் கொண்டு இக்கவிதைகள் படைக்கப்பட்டன.
Layang Layang Bird Tweets
The poems in the book Layang Layang Bird Tweets are about the realities of the land and the pains of nature. These are poems that move in different clusters, hiding the fear and shyness that migratory birds may have across the country. The poems address a distinction between polyphonic sounds and the enchanting voice of a multicultural society.

2021
நீதிபதிகளின் கருத்துகள்
இந்தப் படைப்பில் நான்கு பெருந்தலைப்புகளின்(திணைகள்) கீழ் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. திணைப்பாகுபாடுகளோடு கவிதைகளை எழுதித் தொகுத்திருப்பது இப்படைப்பின் தனித்தன்மை எனலாம். பழந்தமிழ்ச் சங்க இலக்கியங்களை இப்பிரிவுகள் நினைவூட்டுகின்றன. சிங்கப்பூர், பல்லின வாழ்க்கைச்சூழல், பண்பாடு, தனிமனித உணர்வுகள், பெண்களின் அகவுணர்வுகள், அன்றாட வாழ்வில் நம் கண்களில் தென்படும் பொருள்கள், இடங்கள், கலைப்படைப்புகள் ஆகியவற்றைப் பற்றி கவிதைகள் அமைந்துள்ளன. மக்களின் உணர்வுகளும் மொழிப்பற்றும் சிறப்பாகப் பல இடங்களில் வெளிப்பட்டுள்ளன. இந்தக் கவிதைகள் வாசகரை ஈர்க்கும் வகையில் உள்ளன.
மொழியின் பயன்பாடு பொருத்தமாகவும் நன்றாகவும் உள்ளது. பல கவிதைகள் புதுமையான கண்ணோட்டத்தில் அமைந்துள்ளன. இலக்கிய வடிவம், மொழியின் பயன்பாடு ஆகியவற்றில் புதுமை இருக்கிறது. புதுமையான சொல்லாட்சிகள், உருவகங்கள், உவமைகள் ஆகியவை நன்றாக இருக்கின்றன. ஒரு சில கவிதைகளில் உள்ள இருண்மை கவிதைக்கு மேலும் ஆழத்தைத் தருகிறது. இந்தப் படைப்பு, வாசகருக்குப் புதிய செய்திகளை அறிமுகப்படுத்தும். அவற்றை உள்ளடக்கியும் உவமையாக்கியும் உருவகமாக்கியும் எழுதப்பட்டுள்ள கவிதைகளை வாசிக்கும்போது வாசகர் கூடுதலாகப் பல செய்திகளையும் தகவல்களையும் பெறுவர்.
சிங்கப்பூர் வாழ்வைப்பற்றிய கவிதைகள் உலகளாவிய நிலையில் மற்றவர்களுக்குச் சிங்கப்பூரைப்பற்றிய பரந்துபட்ட பார்வையைத் தரும். உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இவரது அலைந்துழலும் வாழ்வியல் மனவுணர்வுகள் குறித்த செய்திகளை இனங்கண்டு மகிழ்வர். கவிஞரின் தனிப்பட்ட அனுபவங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் பல கவிதைகளை ரசித்து அவற்றைப்போலவே தம் உணர்வுகளைக் கவிதையாக்கும் முயற்சியில் இளைய தலைமுறையினர் இறங்கக்கூடும்.
Judges' Comments
This literary work comprises poems from four different genres. This work is unique in its compilation of the poems within the specific attributes of different genres. The sections remind us of ancient Tamil literature. The poems are about Singapore, multiracial living environment, culture, individual emotions, women’s internal emotions, things we see in our daily life, places and artworks. The emotions and love of language of people is conveyed very cleverly in multiple instances. The poems are written in a way that attracts readers’ attention.
The use of language is appropriate and good. Many of the poems convey new perceptions. The literary form and use of language is innovative. The new forms of words, figurative description and analogies are good. The darkness portrayed in some of the poems gives them depth. This work will introduce new concepts to the reader. The figurative and analogic inclusion of these concepts will allow the reader to learn more.
The poems about Singapore will lead to a wider perception about Singapore among global readers. Thousands of Tamil migrants all over the world will enjoy the poet’s life experiences. The younger generation may become motivated to convey their emotions through poems after enjoying the poet’s personal experiences and emotions in the poems.
ABOUT THE AUTHOR

இன்பா
தஞ்சாவூரில் பிறந்து சிங்கப்பூருக்குக் குடியேறிவர். கவிதைகள் இயற்றுவதில் தனித்து விளங்கும் இவர் சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். சிங்கப்பூர்க் கவிமாலை அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்று பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து நடத்தி வருகிறார். சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றம் நடத்திய "தங்க முனை விருதுப் ' போட்டி - 2009ல் முதல் பரிசு பெற்றவர்.
Inbha
Writing is Inbha’s passion and pleasure. She won the Golden Point Award 2009 and the Muthamizh Vizha prize a few times, as well as the Kavimanam Poetry competition prize. Her published books include Ngappol Nimir and Mazhai Vasam.