தேத்தண்ணி

"தேத்தண்ணி" என்ற இந்தச் சிறுகதைத்தொகுப்பு நூலில் சிங்கப்பூர்ச் சூழலை மையப்படுத்தி எழுதப்பட்ட சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. பிரச்சினைக்குரிய மனிதர்களின் அகச்சிக்கல்களை இக்கதைகள் பேசுகின்றன. இயல்பான போக்கில் தடைகள் ஏற்படும்போதுதான் மனித மனம் நிலைதடுமாறுகிறது. இந்நூலில் உள்ள பெரும்பாலான சிறுகதைகள், துன்பத்தை அனுபவிப்பவர்களது மனப்போராட்டத்தை வெளிக்கொணரும் எண்ணத்துடன் எழுதப்பட்டுள்ளன.

Tea (Literal translation)

The book Theathannee features short stories written in Singapore. These short stories examine the struggles of people with mental illness. The human mind succumbs to an unhealthy state when people struggle with overcoming the obstacles they encounter in their daily lives. The majority of the stories in this book were written with the intent of expressing the pain suffered by people battling mental illness.

Vamsi Books
2021

ABOUT THE AUTHOR

மணிமாலா மதியழகன்

என் பெயர் மணிமாலா மதியழகன். என் மனத்தைப் பாதிக்கும் சம்பவங்களைப் புனைவாகப் படைக்கிறேன். சிங்கப்பூர் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்குரிய ‘இனிய தமிழ்க் கட்டுரைகள்’ என்னும் நூலையும்; ‘முகமூடிகள்’, ‘இவள்?’, ‘பெருந்தீ’, ‘தேத்தண்ணி’ ஆகிய சிறுகதைத் தொகுப்பு நூல்களையும் எழுதியுள்ளேன். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் செயலவை உறுப்பினராக உள்ளேன். என்னுடைய படைப்புகளுக்காக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளேன்.

Manimala Mathialagan

Manimala Mathialagan’s previous work comprise Iniya Tamil Katturaigal, a compilation of essays for secondary school students in Singapore, and short story compilations that include Mugamoodigal, Ival, Perunthee and Theathannee. She is a member of the Executive Committee of the Association of Singapore Tamil Writers and has received national and international awards for her work.