ரயில்

சயாம் மரண ரயில்வே வரலாற்றுப் பின்புலத்தில் செய்யப்பட்ட புனைவு - ரயில். சிங்கப்பூரிலிருந்தும் மலேசியாவிலிருந்தும் வலுக்கட்டாயமாக சயாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, ரயில் பாதைக் கட்டமைப்பில் கூலிகளாகப் பயன்படுத்தப்பட்ட தமிழர்களின் வாழ்வு இந்நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது. வெவ்வேறு சூழலில் வெவ்வேறு மனநிலையில் வாழும் கதாபாத்திரங்கள் இந்நாவல் நெடுக வாழ்கிறார்கள். அத்தனை கடினமான சூழலிலும் அவர்களுக்கிடையில் இருக்கும் அன்பும் நட்பும் தரும் வாழ்க்கை மீதான நம்பிக்கையைச் சொல்கிறது.

Rail

Rail depicts the life and struggle of Tamils who were seized from Malaya and Singapore to work at the Siam-Burma Death Railway as labourers. In this novel, different characters with different mindsets act differently in each situation, and it showcases how friendship and hope enabled the protagonists to survive the horrors of war.

Goldfish Publications
2021

ABOUT THE AUTHOR

இந்திரஜித்

பதினேழாவது வயதில் எழுதத் தொடங்கினார் இந்திரஜித். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நாவல் என்று அவருடைய இலக்கியப் பயணம் தொடர்கிறது. ‘சுனை விடும் மூச்சு’,’ ரயிலுக்காக காத்திருப்பவர்கள்’ கவிதைத் தொகுப்புகள், ‘இடம் காலம் சொல்’ கட்டுரைத் தொகுப்பு, ‘வீட்டுக்கு வந்தார்’, ‘புதிதாக இரண்டு முகங்கள்’ சிறுகதைத் தொகுப்புகள் வந்துள்ளன. ரயில் இவரது முதல் நாவல்.

Indrajit

Indrajit started writing when he was seventeen. His travel with poems, short stories, essays, novels is a continuing journey. He has published two poem collections - Sunai Vidum Moochu and Railukkaaga Kathiruppavargal. idam kaalam sol is the only essay collection by him. Veettukku vanthar and Puthithaga Irandu Mugangal are his short story collections. Rail is his first novel.