வெயிலின் கூட்டாளிகள்

வாழ்விற்கு ஒரு முகமில்லை. அது பல்வேறு முகங்கள் கொண்டது. ஒளிந்து விளையாடும் சிறுவர்கள் ஒருவர் மற்றவரைக் கண்டுபிடிப்பதைப் போல இக்கதைகள் வாழ்வின் முகங்களை மொழியின் வாயிலாகக் கண்டுபிடிக்க எத்தனிக்கின்றன. மனிதனின் கதைகள் ஒருபோதும் சொல்லிமுடிக்க முடியாதவை. அலைகளைப் போல முடிவற்று நம்மைச் சுற்றி நிறைந்திருக்கின்றன மனிதர்களின் கதைகள். அவ்வகையில், முடிவிலியாய் நீண்டு செல்லும் அந்தக் கதைச் சங்கிலியின் ஒரு கண்ணியாய் தங்கள் இருப்பை உறுதிசெய்யமுயல்கின்றன இக்கதைகள்.

Friends of Sunlight

Life does not have a single face. It has multiple faces. The stories in Friends of Sunlight identifies these faces like children seeking one another in a game of hide-and-seek. Every story in Friends of Sunlight establishes its existence as a link in an infinite chain of stories.

Yaavarum Publishers
2021

ABOUT THE AUTHOR

கணேஷ்பாபு

2008-ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் வசித்து வரும் கணேஷ் பாபு, சிறுகதைகளையும், நவீன இலக்கியம் மற்றும் நவீன கவிதை வாசிப்பு சார்ந்த கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது சிறுகதைகள் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் நாஞ்சில் நாடன் அவர்களால் சிறந்த சிறுகதைகளாக சிங்கப்பூர் சிறுகதைப் பயிலரங்குகளில் தேர்ந்தெடுக்கப் பெற்றிருக்கின்றன. இவரது கதைகள் சிங்கப்பூர் சிராங்கூன் டைம்ஸ், தமிழ்முரசு, வல்லினம் போன்ற இதழ்களில் பிரசுரமாகி இருக்கின்றன.

Ganeshbabu

Ganeshbabu was born and raised in Tamilnadu, and has living in Singapore since 2008. His short stories have been used in writing workshops conducted by prominent Tamil writers S.Ramakrishnan and Nanjil Naadan. His short stories were published in magazines like Serangoon Times, Aroo, Thangameen Emagazine, Vallinam and Tamil Murasu.