Winner of Creative Nonfiction in Tamil

மொழிவழிக் கனவு

புலம்பெயர் வாழ்வில் குடியேறிய தேசத்தின் வரலாற்றை ஆழமாக அறியவும் ஆன்மாவை நெருங்கி உணரவும் இலக்கியங்களே வெளிச்சமாகத் திகழ்கின்றன. வாசிப்பனுபவக் கட்டுரை உணர்வுப்பூர்வமாகவும், அழகியல் சார்ந்தும் எழுதப்படுகையில் அது நிச்சயமாக ஒரு வாசகனையாவது அப்படைப்பை வாசிக்க வைக்கும். அந்த வகையில் இந்நூல் ஒரு புதிய வாசகனுக்கு சிங்கப்பூர், மலேசியப் புனைவுவெளிக்குள் நுழைவதற்கான வாசலாக விளங்கும்.

Dream Through Language

This book is a collection of reviews that brings about reflections of the social, political and economic landscape of Malaya and the cultural elements of its people, through an intense reading of Malaysian and Singaporean literature. A reader’s experience, when presented with passion and elegantly projected aesthetics has the potential to reach out to other readers and influence them.

Self-Published
2021

நீதிபதிகளின் கருத்துகள்

‘மொழிவழிக் கனவு’ சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து வெளியான இலக்கியப் படைப்புகளைக் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு. தெளிவான கட்டமைப்புடன் செறிவான மொழியில் எழுதப்பட்ட கட்டுரைகளைக் கொண்டது. எழுதப்பட்ட வரலாற்றில் உள்ள இடைவெளிகளை நிரப்பிக்கொள்ளும் வகையில், படைப்புகளின் வரலாற்று முக்கியத்துவத்தை மட்டுமல்லாமல் அவற்றின் இலக்கியத் தகுதிகளையும் சுட்டிக்காட்டுகிறது இந்நூல்.

மொத்தம் 18 கட்டுரைகளைக் கொண்ட இந்நூலில், பெரும்பாலும் புனைவிலக்கியப் படைப்புகளே பேசப்பட்டுள்ளன என்றாலும் ‘நாடு விட்டு நாடு’ ‘சிவகங்கை தொடங்கி சிசங்காங் வரை’ போன்ற தன்வரலாற்று நூல்களும் இடம்பெற்றுள்ளன. இவ்வாறாக புனைவும் அபுனைவும் ஒருங்கே அலசப்படும்போது வாசகருக்கு புனைவுச் சித்தரிப்பிற்கும் இயல்பு வாழ்க்கைக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளையும், காலவோட்டத்தில் மாறிவந்திருக்கும் அல்லது மாறாமலிருக்கும் அம்சங்களையும் ஒப்பிட்டு உணர்ந்துகொள்ள ஏதுவாகிறது.

ஆசிரியரின் இன்னொரு குறிப்பிடத்தக்க பங்களிப்பு இக்கட்டுரைகளில் நிறைந்திருக்கும் ஊடுபிரதித் தன்மை. ஆசிரியரின் விரிவான வாசிப்பையும் தெளிவான சிந்தனையையும் காட்டக்கூடிய இந்த அம்சம், வாசகருக்கு மேலதிக மதிப்புக்கூட்டலை அளிக்கிறது. எடுத்துக்காட்டாக, ‘பேய்ச்சி’ நாவலைக் குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரையில் பேச்சியம்மன் என்று அறியப்படும் நாட்டார் தெய்வத்தைத் தான் அறிந்துகொண்ட விதத்தையும், பெரியாச்சி பற்றி விசாரித்து தன்னுடைய இன்னொரு நூலில் எழுதிய கட்டுரையையும் குறித்து ஒரு விரிவான பின்புலத்தை அளித்த பிறகே ‘பேய்ச்சி’ நாவலுக்குள் நுழைகிறார்.

ஆசிரியர் ஒவ்வொரு கட்டுரையிலும், விவரிக்கவுள்ள நூலைத் தான் அறிந்துகொண்ட விதம், வாசிக்கும் முன்பிருந்த உணர்வுநிலை, வாசித்ததும் தனக்குள் உண்டான மாற்றங்கள், உள்ளடக்கத்திற்கான மதிப்பீடு, நூலின் குறிப்பான சில தகவல்களை, அணுகுமுறைகளைச் சுட்டிக்காட்டுதல், ஒரு முதல் தலைமுறை புலம்பெயர் தமிழராகத் தன்னுடைய சொந்த அனுபவங்களுடன் நூலில் வாசித்தவற்றை ஒப்பிடுவது என்று பல்வேறு தளங்களில் சுவாரஸ்யத்தை அதிகரித்ததோடு சிங்கப்பூரில் அபுனைவு எழுத்து வகைமை தொடர்ந்து மேம்படுவதற்கு வலுவும் சேர்த்துள்ளார்.

Judges' Comments

Dream Through Langauge is an essay compilation on many literary works from Singapore and Malaysia. These essays contains articles written in rich language with clear structure. In order to fill the gaps in the written history, the book points out not only the historical significance of the works but also their literary merits.

In this book, which has a total of 18 articles, mostly works of fiction are discussed, but there are also autobiographical works like 'Naadu Vittu Naadu', 'Sivagangai Thodangi Sisangang Varai'. In this way, when fiction and non-fiction are analyzed together, the reader is able to compare and realize the similarities and differences between fictional depiction and real life, and aspects that have changed or remained unchanged over time.

Another notable contribution of the author is the intertextuality that abounds in these essays. This aspect, which shows the author's extensive reading and clarity of thinking, gives added value to the reader. For example, in the essay written about the novel Peichi, the writer enters to write about novel Peichi only after inquiring about a deity Periyachi and giving a detailed background on an article she wrote in another book.

In each article, the author compares what she read in the book with her own experiences as a first-generation diaspora Tamil, how she came to know the book, how she felt about reading it, the changes she felt after reading it, how she evaluated the content and some of the book's specific information and attitudes. By doing this this work has added strength to the continuing development of the creative nonfiction writing genre in Singapore, from various aspects.

ABOUT THE AUTHOR

அழகுநிலா

அழகுநிலா ஆறஞ்சு , சிறுகாட்டுச் சுனை, சங் கன்ச்சில் ஆகிய மூன்று நூல்களை எழுதியுள்ளார். ‘சிறுகாட்டுச் சுனை’ தொகுப்பு 2020 ஆம் ஆண்டு சிங்கப்பூர் இலக்கிய விருதுக்குத் தகுதிச் சுற்றில் தேர்வானது. இவர் குழந்தைகளுக்காக நான்கு படப் புத்தகங்களை எழுதியுள்ளார்: கொண்டாம்மா கெண்டாமா, மெலிஸாவும் மெலயனும், மெலிஸாவும் ஜப்பானிய மூதாட்டியும், பா அங் பாவ்.

Azhagunila

Azhagunila is the author of Oranju, Sang Kancil and Sirukattu Chunai; the latter was shortlisted for the 2020 Singapore Literature Prize. She has also published four picture books for young readers: Kondama Kendama, Melissavum Merlionum, Melissavum Japaniya Moothatiyum and Pa Ang Bao.