யாமக்கோடங்கி
யாமக்கோடங்கி” ஒருவரின் ஆழ்மனது, உறவுகள், சமூகம் மற்றும் தமிழ் கிராமப்புறங்களின் பாரம்பரியம் ஆகியவற்றைப் பற்றிப் பேசும் நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. பொருள்வயின் பிரிந்து யாமங்களில் தனிமையில் உழலும் ஒரு சாதாரணனின் மனத்தில் குடுகுடுப்பையாய் ஒலித்துக் கொண்டிருக்கும் உணர்வுகளின் தொகுப்பாகக் கவிதைகள் உள்ளன.இந்தக் கவிதையின் மூலம், யாமக் கோடங்கி ஒருவரின் உள் ஆழமான ஏக்கங்களையும், வெளிப்படுத்தப்படாத அக உணர்வுகளையும், மனச்சோர்வடைந்த இரவுகளையும் தனது கலாச்சார வேர்களைப் பிடித்தவாறு ஒளிரச் செய்கிறார்.
Yaamakkodangi - The Night messenger
The Night Messenger has four sections that deal with one's inner world, society, relationships and Tamil rural’s heritage. Through poetry, the night messenger illuminates one's inner deepest longings, unconveyed lust and melancholic nights while remaining attached to his cultural roots. He portrays the rawness of Tamil rural life and their heritage through rich folkloric poems. There are poems in this collection that question: Is life on earth equal for everyone?
பகுதி | Excerpt - "இருப்பின் மேன்மை"
ஒரு மலரைப் போலக் கிடக்கிறது
நதியின் வழியில் சிறு மணற்பரப்பு
உரசிச் செல்லும் நதியால்
எப்பொழுதும் அரிக்கப்படுகின்றன
அதன் இதழ்கள்.
மலர்ந்திருக்கிறதா உதிர்ந்திருக்கிறதா
தெரியவில்லை.
அலைகளால்
நனைந்து கொண்டிருக்கிறது
அது போதும்

நீதிபதிகளின் கருத்துகள்
கோடாங்கி எனில் எளிதாக இசைக்கக் கூடியதொரு தோற்கருவியும் அதை இசைத்துக் கொண்டு குறி சொல்லுகின்றவருமே காட்சியாக விரியும். தமிழ்ப்பண்பாட்டிலும் தமிழ் வரலாற்றிலும் இந்தப் படிமம் உருவாக்கும் உணர்வும் தோற்றமும் அசாதாரணமானது. ஏன் அசாதாரணமானது என்றால், அமைதியான இரவை ஊடறுத்துக் கொண்டு ஒரு செய்தி நமக்குச் சொல்லப்படுவதென்பது, ஒரு கணம் நம்முடைய அத்தனை நரம்புகளையும் சில்லிடச் செய்வதாகும். சிலருக்கு இது வேடிக்கையாகத் தோன்றி ஒரு கேலிப்புன்னகையை மலர்த்தக் கூடும். ஆழ்ந்து நோக்கினால் நம்மை ஊடுருவிச் செல்லும் யாருடையதோ ஏதோ சில சொற்களும் இசையும் தாளமும் இணைந்து கூரீட்டியாக்கி இதயத்தை ஊடுருவும். அந்தளவுக்கான மந்திரச் சக்தி அவற்றுக்குண்டு. என்பதாலேயே யாமக்கோடாங்கி ஆழ்ந்த உறக்கத்திலும் விழிப்பை உண்டாக்குகிறது. அகம் புறம் என இருநிலையிலும் தொழிற்படும் கோடாங்கியின் படிமத்தை பொருள்தேடிப் புலம்பெயர்ந்தவரின் துயரம் இழையோடும் கவிதைகளாக்கியிருக்கிறார் மதிக்குமார் தாயுமானவன். தன்னிலை வெளிப்பாடாகச் சிலவும் பண்பாட்டின் முனகலாகச் சிலவும் எதிர்ப்பண்பாட்டுப் பிரகடனமாகச் சிலவும் என வெவ்வேறு நிலைகளில் இந்தக் கோடாங்கியின் குரல் ஒலிக்கிறது. இதனால் வெளிப்பாட்டிலும் பொருள்வைப்பிலும் புதிய முறையியலைக் கொண்டுள்ளன மதிக்குமார் தாயுமானவனின் கவிதைகள். முதல் பகுதி நவீன கவிதைகளின் வெளிப்பாட்டை, அதற்கான கட்டமைப்பை, மொழியைக் கொண்டுள்ளது. பொருள் தேடிப் புலம்பெயர்ந்தோடி அலையும் வாழ்வின் நிலையை மையப்படுத்திய கவிதைகளில் ஊரில் தங்கி விட்ட குடும்பத்தின் நினைவுகளும் பிரிவேக்கமும் ஊரிழப்பும் தகிப்பாகின்றன. புலம்பெயர நிர்ப்பந்திக்கும் நவீன வாழ்க்கையில் இந்த அகக் கொதிப்பின் தீவிரம் இன்னும் அதிகமாகிறது என உணர்த்துகிறார் மதிக்குமார் தாயுமானவன். இந்தக் கவிதைகளின் இறுதிப்பகுதி சொந்த மண்ணின் (தாய் நிலத்தின்) அடையாளத்தை, அதனுடைய வேரின் மணத்தை, அதில் மீந்திருக்கும் நினைவின் அடுக்குகளை, அதன் வழியே நிகழ்ந்து கொண்டிருக்கும் பெரும் பண்பாட்டு அம்சங்களைப் பேசுவன. முக்கியமாக கிராமியப் பண்பாட்டின் வழியே, தொன்மங்களோடிணைந்த உறவுகளின் நிலையைப்பேசி, தன்னை அவற்றிற் தொடுத்துக் கொள்ள முயற்சிக்கின்றன. இது சொற்களின் வழியே தாகத்தைத் தீர்த்துக் கொள்ளவும் ஆறுதலைத் தேடிக் கொள்ளவுமான ஒரு உளவியலாக்கமாகும். இந்த உளவியலாக்கமே இன்றைய புதிய யுகத்தின் வெளிப்பாடு. ஏனென்றால் உலகமெங்கும் திரிந்து வாழ்வதே இன்றைய வாழ்க்கையாக மாறியுள்ளது. இதைச் சொல்ல விளையும் இந்தக் கவிதைகள் ஒரு புதிய தரிசனத்தின் வெளிப்பாடாகும்.
Judges' Comments
Kodangi is an easy to play leather musical instrument, and the soothsayer who plays it is a sight to behold. The impression and appearance that this image creates in Tamil culture and Tamil history is extraordinary. What is extraordinary is that to be told a message intersecting through a quiet night, is to chill all our nerves for a moment. For some, this may sound funny and elicit a sarcastic smile. If we look deeper, some words of someone who penetrates us combine with music and beats to make a chorus and penetrate the heart. They have such magical powers. That is why Yamakodaangi awakens even in deep sleep. Mathikumar Thayumanavan has transformed the image of Kodangi, which works both inside and out, into poems with the tragic thread of an immigrant in search of meaning. The voice of the axe is heard at different levels, some as self-expression, some as a cultural moan, and some as a declaration of counterculture. Thus the poems of Mathikumar Thayumanavan have a new methodology of expression and content. The first part deals with the expression of modern poetry, its structure, its language. In the poems, which focus on the life of a migrant in search of wealth, the memories of the family who stayed in the village, the separation, longing and the loss of the village become distressing. Mathikumar Thayumanavan points out that this inner turmoil is even more intense in the modern life that compels them to migrate. The concluding part of these poems speak of the identity of the native land (motherland), the fragrance of its roots, the layers of memory that remain in it, and the great cultural aspects that take place through it. It is mainly through the medium of rural culture that they try to articulate themselves by talking about the state of relationships intertwined with myths. It is a psychological process of quenching thirst and finding solace through words. This psychology is the manifestation of today's new age. Because wandering around the world has become the life of today. These poems are an expression of a new vision.
ABOUT THE AUTHOR

மதிக்குமார் தாயுமானவன்
மதிக்குமார் தாயுமானவன் தமிழ் நாட்டிலுள்ள சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் ஊரைச் சேர்ந்தவர். திருச்சியிலுள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் உற்பத்தி தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியாளர் பட்டம் பெற்றுள்ளார். 2008 ஆம் ஆண்டு பணி நிமித்தமாகச் சிங்கப்பூருக்கு வந்து, 2009 ஆம் ஆண்டிலிருந்து நிரந்தரவாசத் தகுதி பெற்று, தனியார் நிறுவனத்தில் மென்பொருள் துறையில் மேலாளராகப் பணியாற்றி வருகின்றார். சிங்கப்பூரின் தேசிய கலைகள் மன்றம் நடத்திய தேசிய கவிதை விழாவிலும், தங்கமுனை பேனா கவிதைப் போட்டியிலும் அவரது கவிதைகள் சிறப்புப் பரிசுக்கு தேர்வாயின.சிங்கப்பூரில் தமிழ் முரசு நாளிதழிலும் மற்றும் இதழ்களிலும், தமிழ்நாட்டில் மணல்வீடு,நடுகல்,ஆனந்த விகடன் போன்ற இதழ்களிலும் அவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. திருமணமாகி ஒரு மகளும் மகனும் உள்ளனர்.
Mathikumar Thayumanavan
Mathikumar Thayumanavan was raised in Tamil Nadu and obtained his bachelor's degree in engineering from the National Institute of Technology (NIT) in Trichy, India. In 2008, he relocated to Singapore and has been a permanent resident since 2009. He works as an ERP operation manager. In 2015 and 2021, he won the Golden Point award (Honourable Mention) for Tamil Poetry. He won the Senior Category of the Singapore National Poetry Competition held by the National Arts Council (NAC) in 2015.
சிறு குறிப்புகள் மதிக்குமார் தாயுமானவன் | Short Notes with Mathikumar Thayumanavan
"மனக்கண் வழியே" என்பதற்கு எழுத்தில் உங்கள் அர்த்தம் என்ன?
What does "Mata Hati | 心眼 | Eye of the Heart | மனக்கண் வழியே" mean to you in writing?
எந்த ஒரு மனிதரையும் அவரின் புறச் செயல்பாடுகளைப் போல அகச் செயல்பாடுகளும் ஒவ்வொரு நிமிடமும் உயிர்பித்துக் கொண்டிருக்கும். படைப்பாளிகளுக்கு அகச்செயல்பாடுகளின் இயக்கம் கூடுதலாகவே இருக்கும். அல்லது கூடுதலாக இருக்குமாறு படைப்பாளிகளும் பார்த்துக் கொள்வர். என் மனக்கண் வழியே நான் நினைப்பதை அல்லது உணர்வதை இன்னொரு மனக்கண் வழியாகவும் உணர வைத்து அதன் வழியாக ஒரு மாற்றத்தை அல்லது தாக்கத்தை நிகழ்த்தவே எழுதுகிறேன்.
I believe that our inner thoughts keep us alive like our external actions. In general, the mind of creators murmurs with such deep thoughts. They also ensure that the flow of their deep thoughts grows. I write to make the readers process the thoughts in their own way like how I process while I write. By that way, I believe I can create an impact in their thoughts and lives.
உங்கள் எழுத்து செயல்முறை எப்படி இருக்கும்? நீங்கள் தட்டச்சு செய்கிறீர்களா அல்லது எழுதுகிறீர்களா? பல வரைவுகள், நீண்ட இடைநிறுத்தங்கள் அல்லது திடீர் செயல்பாட்டு வெடிப்புகள் உள்ளனவா?
What does your writing process look like? Do you type or write? Are there multiple drafts, long pauses, or sudden bursts of activity?
திட்டமிட்டோ அல்லது நேரம் ஒதுக்கியோ கவிதைகள் எழுதுவதில்லை. தொடக்க நிலையில் அவ்வாறு இருந்ததுண்டு. கவிதைகள் உருவாகும் சூழலுக்கும், தருணத்திற்கும் எப்பொழுதும் காத்திருக்கும் மனநிலையோடு இருத்தலே தற்போது தேவையாக இருக்கிறது. அவ்வாறு அமையும் தருணத்தில் கவிதை தன்னை முழுமையாக எழுதிக் கொள்வதை உணர்ந்திருக்கிறேன். அதை தொகுப்பாக்கும் போது மட்டும் சில மாற்றங்களைக் கவிதைகளில் செய்திருக்கிறேன்.
I used to schedule and set aside time for writing during my initial stages of writing. Nowadays I don’t set aside time specifically for writing. Because I realized that it was essential to have an awaiting mentality for the circumstances and the right moment for creating the poetry. At that point, the poetry begins to compose by itself. When I was compiling the poems for the collection, I have made some changes in some poems.
உங்கள் வேலை செய்யும் இடம் எப்படி இருக்கும்?
What does your working space look like?
மேற்சொன்னபடி கவிதைக்கான தருணம் அமைவது, அதற்காக காத்திருக்கும் மனநிலை மட்டுமே பிரதான தேவையாக உணர்கிறேன். நேரம் , இடம் , கருவிகளை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை.
As I mentioned above, The foremost requirement is to be patient for the moment to occur. Then the poetry happens. Time, space and tools don't matter, and they were not taken into consideration for creating my poetry.
தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் நூலிற்கு 30 வார்த்தைகள் அல்லது அதற்கும் குறைவான வார்த்தைகளில் ஒரு சுருக்கமான உரை உருவாக்கவும்.
Make an elevator pitch for your shortlisted work in 30 words or less.
பொருள்வயின் பிரிந்து யாமங்களில் தனிமையில் உழலும் ஒரு சாதாரணனின் மனத்தில் குடுகுடுப்பையாய் ஒலித்துக் கொண்டிருக்கும் வாழ்வின் அக உணர்வுகளையும், உள் ஆழமான ஏக்கங்களையும் பாடுகின்றது. அதே நேரத்தில் ஒருவரது உள்ளத்தைத் தட்டி, சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையைக் கேள்வியும் கேட்கிறது.
This night messenger sings the beautiful aspects of life of the migrant as well as illuminating one’s deep longingness. He knocks one’s inner self and questions the inequality prevailing in society.
இந்தப் படைப்பை எழுதும்போது ஒரு முக்கியமான தருணத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?
Could you share a pivotal moment as you were writing this work?
கவிதைகள் பல எழுதிய பின்அவற்றை தொகுப்பாக்கும் போது , சில கவிதைகளை தொகுப்பில் இருந்து நிராகரிக்கும் சூழலை வலியோடு கடந்தது / கையாண்டது.
தொகுப்பு வந்தவுடன் அதன் விமர்சனங்களை எதிர்பார்த்திருந்த தருணங்கள்.
The painful moments I had gone through while removing some poems during the compilation for the poetry book.
And the exciting moments when I was expecting the reviews of poetry collection once it was out.
இந்தப் புத்தகத்தை எழுதும்போது உங்களுக்கு நீங்களே ஒரு அறிவுரை கூற விரும்பினால், அது என்னவாக இருக்கும்?
If you could give one advice to yourself when you were writing this book, what would it be?
கவிதைகளைத் தொகுக்கும் போது , எதுவெல்லாம் கவிதை என்பதைக் காட்டிலும் எதுவெல்லாம் இன்றைய கவிதை வகைமைக்குள் வராது என்று தெரிந்து கொண்டது இனி வரும் காலங்களில் கவிதை எழுதும் போது அதை மனதில் வைத்துக் கொள்வது.
While I was compiling the poems for the collection, It became evident that realizing what are all the poems that don’t belong to today’s poetry is important rather than questioning what belongs to poetry. I would like to keep this realization and the need of today's poetry even during the writing stage of poetry.