இன்றைய கவிதையிலிருந்து இந்தத் தொகுப்பில் இருக்கும் கவிதைகள் முற்றிலும் மாறுபட்டு இருக்கின்றன. கவிதைகளில் புதிய வடிவங்களை பரிசோதனை செய்ய முன்வரும் ஒருவரின் முயற்சி. அலங்கார ஆடை ஆபரணங்களை கழற்றி விட்டு நளினமான ஒரு நடனம் புரியும் ஒரு நங்கையை போல் இவை நடந்து கொள்கின்றன. கவிதையின் வடிவம், அதன் சொல் அமைப்பு, ஒலி அமைப்பு ஆகியவற்றில் தனித்த அக்கறை எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் இது யாப்பிலக்கணக் கவிதை அல்ல. முழு சுதந்திரமான கவிதை. சிங்கப்பூரின் நிலவியலையும் பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கியவை.

Oru Buddha Madhiyam

This poetry collection experiments with different forms and styles. It vividly exhibits the author's journey of self reflection through various subjects and objects in the Singapore landscape. These poems bring out different perspectives like a kaleidoscope. They were discussed and debated in gatherings in Singapore and in India.

பகுதி | Excerpt - "ஒரு புத்த மதியம்"

மர நிழல்களில் தள்ளித் தள்ளி அமர்ந்து
அமைதியாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்
முகக்கவசம் அகற்றிய
வேலைக்கார புத்தர்கள்.
இலக்குடனோ இலக்கில்லாமலோ
சாலைகளில் விரைந்துகொண்டிருந்தனர்
முகக்கவசம் அணிந்த
மத்தியதட்டு புத்தர்கள்.
குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறைகளில்
விவாதித்துக் களைத்திருந்தனர்
ஒரு காதில் தொங்கிய முகக்கவசத்துடன்
பூர்ஷ்வா புத்தர்கள்.
வேறு இரு புத்தர்களின் வாகனங்கள்
சாலையில் மிக நெருக்கமாகச் சந்தித்துக்கொள்ள
அங்கே அமைதிக்கு சிறு பங்கம்.
பேருந்துகளில் உறங்கிக்கொண்டிருந்த
புத்தர்கள் சூனியத்துக்கு மிக அருகில் இருந்தனர்.
வாகன எண்களை அவசரமாகக் குறித்துக்கொண்டனர்
அவ்வழி சென்ற பற்பல 4D புத்தர்கள்.