சம்செங்
சிறு வயதிலேயே தமிழ் நாட்டிலிருந்து சிங்கை வரும் ஒருவன் புறத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு படிப்பில் கவனம் சிதைந்து ஒரு ரெளடியாகி மாறுகிறான். கெட்ட பெயர் வந்து சேருகிறநு.' ஓ' லெவல் தேர்வுக்குப் பின் விழிப்பு ஏற்பட்டுப் பின்னர் தட்டுத் தடுமாறி வாழ்வில் முன்னேறி சமூகத்திற்குப் பயனுள்ளவனாக மாறும் கதை. சிங்கப்பூர்ப் பின்னணி, வரலாறு இவற்றோடு நாவல் நகர்ந்து செல்கிறது.
Samseng
From a tender age, a boy from Tamil Nadu came to Singapore due to external pressures. Unfortunately, he was forced to become a samseng in his teenage years. Overcoming the stigma associated with a bad reputation, he rises to excel academically after passing his 'O' Level exams and subsequently redirects his life, setting up a foundation to help poor children who could not continue with their studies. The novel intertwines with Singapore's history and takes place at Katong, Joo Chiat place and Tanjong Pagar, alongside the 1964 racial riots in Singapore.
பகுதி

Jhivajothe Prints, 2023
ABOUT THE AUTHOR
பொன் சுந்தரராசு
பொன் சுந்தரராசு 1947 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பிறந்தார். 1956 ஆம் ஆண்டு சிங்கப்பூர்க்கு நகர்த்தினார். அவரது வாழ்க்கை வளர்ச்சியுடன், சாதனையுடன் கூடியுள்ளது, மற்றும் பிறந்தப்படியில் எழுத்துக்களுக்கு உரிமையையும் உடைத்துள்ளார். அவர் வானொலி, தொலைக்காட்சி பரிசோதனைகளில் பங்கேற்று, ஏழு பேர்வதும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.
Pon Sundararaju
Pon Sundararaju was born in 1947 in Tamil Nadu and relocated to Singapore in 1956. He was appointed as the first Master Teacher for Tamil Language in 2003 by the Ministry of Education. He developed the modern teaching pedagogy and methodology for Tamil Teachers until 2007. He has contributed to radio and television broadcasts and has published over seven books.
சிறு குறிப்புகள் பொன் சுந்தரராசு | Short Notes with Pon Sundararaju
"மனக்கண் வழியே" என்பதற்கு எழுத்தில் உங்கள் அர்த்தம் என்ன?
What does "Mata Hati | 心眼 | Eye of the Heart | மனக்கண் வழியே" mean to you in writing?
‘புறக்கண்கள் உலகில் உள்ள பொருள்களையும் காட்சிகளையும் ஒரு ‘கேமரா’ போல் பதிவு செய்யும். ஆனால்,மனக்கண்தான் காண்பனவற்றையும் உணர்வனவற்றையும் சீர்தூக்கி நன்மை தீமைகளை வெளிப்படுத்தும்.’
Our external eyes capture things and several scenarios precisely as camera . But the eyes internal assess what is seen an felt in a balanced way, judging the good and bad of what is seen and felt.
உங்கள் எழுத்து செயல்முறை எப்படி இருக்கும்? நீங்கள் தட்டச்சு செய்கிறீர்களா அல்லது எழுதுகிறீர்களா? பல வரைவுகள், நீண்ட இடைநிறுத்தங்கள் அல்லது திடீர் செயல்பாட்டு வெடிப்புகள் உள்ளனவா?
What does your writing process look like? Do you type or write? Are there multiple drafts, long pauses, or sudden bursts of activity?
கணினியில் தட்டச்சு செய்வேன். ஒன்றுக்கு மேற்பட்ட படிநிலைகளில் படைப்பு அமையும். திரும்பத் திரும்பச் செம்மைபடுத்துவேன். ஒவ்வொரு முறையும் மாற்றம் செய்யம்போது புதுக்கருத்துகள் புலப்படும்.
I used to type in a laptop, but more than one draft will be taking place. Each time I edit the draft, new ideas will pop up. I will amend according the new ideas.
உங்கள் வேலை செய்யும் இடம் எப்படி இருக்கும்?
What does your working space look like?
படைப்பின் இடைவெளி கருவையும் படைப்பையும் முடிவையும் பொருத்து அமையும். ஒரு மாதத்தில் சில கதைகளை எழுதிவிடலாம். ஒரு வருடம் ஆன கதைகளும் உண்டு.
It depends the theme, presentation and ending. Some writings are able to be finished in one month. Few texts drag to a year.
தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் நூலிற்கு 30 வார்த்தைகள் அல்லது அதற்கும் குறைவான வார்த்தைகளில் ஒரு சுருக்கமான உரை உருவாக்கவும்.
Make an elevator pitch for your shortlisted work in 30 words or less.
‘சாம்செங்’ நாவல் நான் நேரிடையாகப் பார்த்து அறிந்த கதை . 50% உண்மை. 50% கற்பனை. அனுபவத்தின் வெளிப்பாடு எப்போதுமே உண்மையை வெளிக்கொணர்வதாக அமையும். இந்நாவலை முடித்தபோது பெரு நிறைவு ஏற்பட்டது.
The novel ‘Samseng’ is my direct experience. 50% true experience and 50% imagination. True experiences always reflect the truth. A great fulfillment when I completed this novel.
இந்தப் படைப்பை எழுதும்போது ஒரு முக்கியமான தருணத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?
Could you share a pivotal moment as you were writing this work?
ஜூச்சியாட் பிளேஸ், ஈஸ்ட் கோர்ஸ் கடற்கரை, காத்தோங் பகுதிகளை வர்ணிக்கும்போது நெஞ்சில் வலி ஏற்பட்டது. இளமைக் காலத்தில் சுற்றித் திரிந்த இடங்கள். நகர மேம்பாட்டுத் திட்டத்தால் அவ்விடங்கள் பெரும் மாற்றங்கள் அடைந்துள்ளன. அவ்விடங்களின் பழைய முகத்தை காணாது துன்புற்றேன்.
When describing Joo Chiat Place, East Course Sea Side and Katong I felt pain in my heart. When I was a student I use to wander around these places. Now those places lost their old face due to city development.
இந்தப் புத்தகத்தை எழுதும்போது உங்களுக்கு நீங்களே ஒரு அறிவுரை கூற விரும்பினால், அது என்னவாக இருக்கும்?
If you could give one advice to yourself when you were writing this book, what would it be?
நான் சில உண்மைகளை இந்நாவலில் சொல்லி இருக்கிறேன். அது சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் புரியும். யாருடைய மனமும் புண்படாமல் எழுத வேண்டும் என்று ஆலோசனை கூறுவேன்.
I have elaborated some true facts in the novel. Only the connected people are able to realize those facts. Write without hurting the people. That is advice to me.

