இந்த நூல் ‘பன்மொழித் தமிழன் முத்தழகு மெய்யப்பன்’ கடந்த கால அனுபவங்களை அடிப்படையாக வைத்து, பொது சேவைக்கு அர்ப்பணிப்பு செய்த ஒரு சிங்கைக் குடிமகனின் நன்கு வாழ்ந்த வாழ்க்கையின் சாரத்தை படம்பிடிக்கும் ஒரு எழுச்சியூட்டும் நினைவுக் குறிப்பாகும். வாழ்க்கையில் சமூகத் தொண்டு, மொழித் தொண்டு, சமூக நல்லினக்கத் தொண்டு, நாட்டின் பொருளாதாரம் உயரத் தொண்டு போன்றவை வெளிப்படுத்தும் ஒரு ஊக்குவிப்பு நூலாகும்.

நூலாசிரியர்: முத்தழகு மெய்யப்பன்       
இணை ஆசிரியர்: இரா அருள்ராஜ்


Living Legacy: A Chronicle of Purpose

Living Legacy: A Chronicle of Purpose is an inspiring memoir capturing the essence of a life well-lived, grounded in past experiences and dedicated to public service. The author, motivated by a desire to be remembered as a person loved in life and unforgettable in death, presents a collection of wisdom and experiences. Beyond literary pursuits, the author's life emerges as a tapestry of charity and societal contributions, notably as a Lions Club member and active participant in various organisations, significantly impacting the country's economy and tourism. The memoir also delves into the author's passion for languages, showcasing his commitment to teaching and learning, contributing not only to personal growth but also to societal betterment. Living Legacy stands not just as a memoir but as a testament to a life dedicated to service, language, and societal harmony.

Author: Muthalagu Meyyappan                                           
Co-author: R Arulraj

பகுதி | Excerpt - "பன்மொழித் தமிழன் முத்தழகு மெய்யப்பன்"

பின்புலம் எதுவும் இன்றி உறுதியான நம்பிக்கையையும் உழைப்பையும் மட்டும் மனத்தில் கொண்டு காரைக்குடியிலிருந்து புறப்பட்டு சென்னை, புதுடில்லி, கத்தார் என்று பணியாற்றிவிட்டு அமெரிக்கா செல்லும் வழியில் சிங்கப்பூரில் கிடைத்த வேலை வாய்ப்பைப் பற்றிக் கொண்டு குடியுரிமை பெற்றேன்.

என் முன்னேற்றத்திற்கும் சாதனைகளுக்கும் முக்கிய மூல காரணங்கள் - கடுமையான உழைப்பு மேலும் மேலும் படித்த படிப்புகள், மொழிகள், பயிற்சிகள் மற்றும் வெற்றி நிச்சயமென்ற திடமான நம்பிக்கையுடன் சோர்வின்றிச் செயல்பட்டதே ஆகும்.

சிறுவயதிலிருந்தே நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு உதவி செய்ததால் எனக்கு மிக அருமையான நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களின் உதவியால் பல நன்மைகளை அடைந்தேன்.

படிப்பில் ஆர்வம் இருப்பினும் மேல்படிப்பு படிக்க குடும்ப சூழ்நிலை இடம் கொடுக்கவில்லை. வேலையிலும் சிறியது பெரியது என்று இல்லாமல் கிடைத்த வேலையை உழைப்பின் துணை கொண்டு செய்ய விழைந்தேன். மண்வெட்டும் வேலைதான் ஆரம்பம்.

வாழ்வில் உயர்ந்திட உழைப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு நம் தகுதியை வளர்த்துக் கொள்வதும் முக்கியம். என் அடுத்தக்கட்ட நகர்விற்குச் சென்னையில் தட்டெழுத்து , சுருக்கெழுத்து பயின்றேன். ஜப்பானிய மொழியில் தேர்ச்சிப் பெற்றேன். புதுடில்லி அப்புறம் கத்தாரில் வேலை.

“ஏணியைக் கூரை மீது போடாதீர்கள் வானத்தின் மீது போடுங்கள்” என்று சொல்வார்கள். அப்படி அன்று என் அடுத்த இலக்கு அமெரிக்கா போக வேண்டும் என்பது. சிங்கப்பூரின் வழியாக அமெரிக்கா போகும் பயணத்தைத் தொடங்கினேன். திட்டம் தடம் மாறி, படித்து வைத்திருந்த ஜப்பானிய மொழியால் என் பயணம் என்னை சிங்கப்பூரிலே குடியுரிமையுடன் இருக்க செய்து விட்டது.

வாழ்வில் சாதனைகள் புரிய, பிறரிடம் நம் காரியம் பலிக்க முக்கியமான ஒரு விஷயம் நம் அனுகுமுறை. பகை சாதிக்காததை நகை சாதிக்கும். சிரித்த முகத்துடன் பேசி தாய்மொழி தமிழ் சம்பந்தப்பட்ட பல முன்னேற்றங்களை சிங்கப்பூரில் செய்திருக்கிறேன். தமிழ் பிழை கண்ட இடங்களில் எல்லாம் சரிசெய்ய காரணமாய் இருந்துள்ளேன்.

சிங்கப்பூர் விமானத் தளத்தில் அறிவிப்புப் பலகைகளில் தமிழை இடம் பெறச் செய்தேன். சிங்கப்பூரில் ஜப்பானிய பேச்சுப் போட்டியில் வென்று நானும் என் மகளும் புகழடைந்தோம்.

 

சிங்கை முழுவதும் விரைவு வண்டி நிலையங்கள் அனைத்திலும் தூய்மைப் பணி செய்துள்ளேன் செய்கிறேன். சிங்கைக்கு நன்றியுடன் உள்ளேன் என்பதை உறுதி செய்து கொண்டுள்ளேன்.

 

ஒன்பது முக்கிய ஆசிய மொழி அடங்கிய உடனடி தமிழ் மொழிபெயர்ப்பு சாதனத்தில் தமிழை பத்தாவது மொழியாக இணைக்க ஐந்தாண்டு கால முயற்சியில் வெற்றி பெற்றுள்ளேன்.

இன நல்லிணத்தை ஊக்குவிக்கும் நோக்கில் சிங்கையின் நான்கு ஆட்சி மொழிகளிலும் ஔவையின் ஆத்திசூடியை புத்தகமாக வெளியிட்டிருக்கிறேன்.

தாய்மொழி தமிழுக்கும் சிங்கை சமுதாயத்திற்கும் பல நற்சேவைகள் செய்து, பல விருதுகளைப் பெற்று இருக்கிறேன்.

 


விஞ்ஞானம் தொழில்நுட்பத்திற்கான 2013 ஆம் ஆண்டு விருது.
2017 திருவள்ளுவர் விருது பேராசிரியர் அறவாணர் விருது
சிங்கை தமிழ்மொழி காவலர் விருது; அரிமா சங்க உறுப்பியம்;
அடித்தளப் பணியாளன்

சாதனைக்கு எதுவும் தடையில்லை. விடா முயற்சி, உழைப்பு, மன உறுதியும் உண்மையும் என்பதை என் நூல் “பன்மொழித் தமிழன் முத்தழகு மெய்யப்பன்”-இல் பதிய வைத்திருக்கிறேன்.

 

சோம்பேறிகள் சாதனை படைத்ததாகச் சரித்திரம் இல்லை 

என்னும் கூற்று என்றும் என் மனதில்.