சிங்கப்பூர் இலக்கியப் பரிசு 1992-ல் தொடங்கப்பட்டது. சிங்கப்பூரின் ஆகச் சிறந்த இலக்கியப் பரிசான இதனை நூற்று-எழுபதுக்கும் அதிகமான எழுத்தாளர்கள் இதுவரை பெற்றுள்ளனர். ஈராண்டுக்கு ஒருமுறை இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. சிங்கப்பூரிலும் வெளிநாட்டிலும் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் சிங்கப்பூர் குடிமக்களாலும் நிரந்தரவாசிகளாலும் எழுதி வெளியிடப்பட்ட புனைவு/படைப்பாக்க அபுனைவு மற்றும் கவிதை ஆகியவை இப்போட்டிக்கு அனுப்பப்படலாம். உலகிலுள்ள மிகச் சில பன்மொழி இலக்கியப் பரிசுகளில் சிங்கப்பூர் இலக்கியப் பரிசும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்குப் படைப்புகளை அனுப்ப வேண்டிய இறுதி நாள், 15ஆம் தேதி மே மாதம், 2026 (வெள்ளிக்கிழமை), மாலை 6 மணியாகும் (சிங்கப்பூர் நேரப்படி).