படைப்பும் பன்முகப்பார்வையும்
படைப்பும் பன்முகப்பார்வையும் என்ற தலைப்பில் வாசகர்களிடையே வாசிப்புப் பழக்கத்தின் ஆர்வத்தினை அதிகரிப்பதற்காகச் சிங்கப்பூர், மலேசியா, தமிழ்நாட்டு நூல்கள் பல இந்த நூலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சிறுகதை, கவிதை, தனிக்கட்டுரைகள் எனப் பல இலக்கிய வடிவங்களின் எளிதான அறிமுகம் இந்தப் படைப்பும் பன்முகப்பார்வையும். மேலும், சிறுகதை, கவிதைகளை எப்படியெல்லாம் அணுகலாம் என்ற எளிமையான ஒரு புரிதலையும் வாசகர்களுக்கு இந்நூல் வழங்குகிறது. படைப்புகளைக் கண்டறிவதற்கு நமக்கு முதலில் வாசிப்புப் பழக்கமும் தேடலும் மிகவும் அவசியம். இந்தச் செயற்பாட்டைச் சாத்தியப்படுத்தும் ஒரு சிறு முயற்சியே இந்தப் படைப்பும் பன்முகப்பார்வையும்.
The Multifarious Views of Writing
The Multifarious Views of Writing introduces literary works of Singaporean, Malaysian and Tamil Naidu writers, with the aim to inspire reading. Readers are introduced to short stories, poems and essays and how they can approach and understand them.
எம்.சேகர்
2021
2021
ABOUT THE AUTHOR
எம்.சேகர்
இதுவரை 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் பல நூறு கவிதைகளும் எழுதியுள்ளார். இவரின், ‘கைவிளக்குக் கடவுள்’ என்ற கவிதைத் தொகுப்பு 2016 இன் சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்கான இறுதிப் பரிசீலனைக்குத் தேர்வானது. 2018 இல் ‘எழுத்தும் எண்ணமும்’, ‘இராவணனின் சீதை’ என இரண்டு நூல்களும் சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்கான இறுதிப் பரிசீலனைக்குத் தேர்வானது. அதில், ‘இராவணனின் சீதை’ என்ற நூலுக்குச் சிங்கப்பூர் இலக்கியப் பரிசின் பாராட்டுப் பரிசு கிடைத்தது.
Segar S/O Muniandy
M. Segar has written more than 200 short stories and several hundred of poems. His book of poetry Kaivilakku Kadavul poetry, was shortlisted for the 2016 Singapore Literature Prize (SLP). In 2018, his non-fiction book Eluttum Enaamum was shortlisted for SLP and his poetry collection Ravananin Seethai won a commendation for SLP.