இத்தாலியனாவது சுலபம்
“இத்தாலியனாவது சுலபம்” சிங்கப்பூர் எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ்-இன் 80 கவிதைகள் அடங்கிய தொகுப்பு. உலகமயமாகிவரும் சூழலில் தனது அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் தக்க வைத்துக்கொள்ள நினைக்கும் சிங்கப்பூர் தமிழர்களின் முன் நிற்கும் சவால்களை இக்கவிதைகள் பல கோணங்களிலிருந்து ஆராய்கின்றன. இந்த அலசலைச் செய்யும் விதத்தில் இத்தொகுப்பின் கவிதைகள் மூவாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழ் இலக்கிய பாரம்பரியத்தைத் தமக்குள் நிலை நிறுத்திக் கொள்ளும் அதே நேரத்தில் கவிதைகளில் பழக்கமாக்கிவிட்ட சித்திரங்களையும் உத்திகளையும் தள்ளி தமக்கென்று புதிய உத்திகளையும் சொல்லாடல்களையும் அமைத்துக் கொண்டுள்ளன. இத்தொகுப்பின் தலைப்பே சிங்கப்பூர் போன்ற பன்னாட்டு, பல கலாச்சாரச் சூழலில் வாழும் தமிழர்கள் எதிர்நோக்கும் அடையாளச் சவால்களைச் சொல்லும் விதமாக அமைந்திருக்கிறது. தனது மொழி, தனது கலாச்சாரம் என்ற பிணைப்பு உள்ளவனக்குக் கூட இணையம் வேறொரு அடையாளத்தை உடுத்திக் கொள்ளும் வாய்ப்பை எளிதில் வழங்குகிறது. இத்தகைய சூழலில் விருப்பம் இருந்தால் சந்தேகமே இல்லாமல் யாரும் இத்தாலியனாவது சுலபம்தான்.
It is Easy to be an Italian
It is Easy to Be An Italian is a collection of 80 poems by Sithuraj Ponraj in Tamil. The poems seek to explore the various aspects and challenges associated with preserving one's own Singaporean Tamil culture and identity in an increasingly interconnected global environment. To do this, the poems in this collection break away from images and forms traditionally used in Tamil poetry while retaining a strong connection to purity of the language shaped by the three millennia of Tamil literature. The title of the collection reflects the tension that exists in the hearts of many Singaporeans - a deep sense of one's own culture, and yet the possibility of accessing online communities where one can be something else altogether if one chooses. A world where indeed it is easy to be Italian or anyone else you choose to be.

2019
ABOUT THE AUTHOR

சித்துராஜ் பொன்ராஜ்
சித்துராஜ் பொன்ராஜ் 18 வயதிலிருந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் கதைகள், கவிதைகள் எழுதி வருகிறார். இதுவரை தமிழில் "பெர்னுய்லியின் பேய்கள்" "விளம்பர நீளத்தில் ஒரு மரணம்" ஆகிய நாவல்களையும், "மாறிலிகள்" , "ரெமோன் தேவதை ஆகிறான்" ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார். "காற்றாய்க் கடந்தாய்", "சனிக்கிழமை குதிரைகள்" ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புக்களையும், "கதைசொல்லியின் ஆயிரம் இரவுகள்" என்ற கட்டுரை நூலையும் வெளியிட்டுள்ளார்.
மேலும் "கௌண்டில்யன் சதுரம்", "துப்பறியும் லலிதா" என்ற இரண்டு சிறுவர் நாவல்களை எழுதியுள்ளார்.
Sithuraj Ponraj
Sithuraj Ponraj has been writing fiction and poetry in English and in Tamil since he was 18. He has published two novels in Tamil, Bernouilli's Ghosts and Vilambara Neelathil Oru Maranam (A Death in an Ad Length) and has written two short story collections, Maariligal (The Unchangeables) and Ramon Thevadai Aagiraan (Ramon Becomes an Angel). He has published two poetry collections, an essay collection and two children’s novels.