ஏற்றம் அளித்த இருநூறு
1819-2019 என்னும் இருநூறு ஆண்டு காலக் கட்டத்தில் சிங்கப்பூர் நாடு கண்ட ஏற்றம் குறித்து விவரிக்கும் நூல் இது. சிங்கப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்ட இருநூறு ஆண்டுக்கால கட்டக் கொண்டாட்டத்தை மனத்தில் வைத்து இந்த நூல் எழுதப்பட்டது. கல்வி, சாங்கி விமான நிலையம் ஆகிய இரண்டு துறைகளில் இந்நாடு கண்ட முன்னேற்றம் பற்றிப் புகழ்ந்து கூறும் 200 பாடல்கள் கொண்ட நூல் இது.
முறையான கல்வித் திட்டம் இந்த இருநூறு ஆண்டுகளில் கண்ட வளர்ச்சியையும் சிங்கப்பூரின் பல விமான நிலையங்கள் பற்றியும் அவை எவ்வாறு இறுதியில் உலகத்தின் முதல்தர விமான நிலையம் என்ற பெருமையைத் தாங்கி நிற்கும் சாங்கி விமான நிலையமாக உருவெடுத்தன என்பது குறித்தும் பேசும் மரபுக் கவிதை –அறு சீர் விருத்தம்- பாடல்களைக் கொண்ட நூல் இது.
Growth of 200 (years)
Growth of 200 Years describes the rise of Singapore from 1819 to 2019. Written as part of Singapore’s bicentennial celebrations, the book has two hundred verses, recounting the nation’s significant triumphs in two examples, education and Changi airport. The book contains poems that trace the growth of formal education over two hundred years and recalls the development of various airports in Singapore, culminating in Changi Airport attaining its top international reputation.

2019
ABOUT THE AUTHOR

அ. கி. வரதராசன்
அ. கி. வரதராசன் தமிழ்நாட்டில் 1944ஆம் ஆண்டு பிறந்தவர். சிங்கப்பூரில் வேலையேற்க 1982 இல் வந்தவர். கடந்த 25 ஆண்டுகளாக, சிங்கப்பூர் குடிமகனாக வாழ்ந்து வருகிறார்.
மரபுக் கவிதைகள் எழுதுபவர். இவரது மரபுக் கவிதை நூல்கள் சிங்கையில் பல பரிசுகளைப் பெற்றுள்ளன. கம்பனை ஆய்வு செய்து பல நூல்களை எழுதியுள்ளார். இந்நூல்கள் தமிழ்நாட்டிலுள்ள கம்பன் கழகங்களால் அவர்கள் நடத்தும் கம்பன் விழாக்களில் வெளியீடு கண்டு, அக்கழகங்கள் வழங்கும் பரிசுகளையும் விருதுகளையும் வரதராசன் பெற்றுள்ளார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக, இயக்கம், பாடலாக்கம், மேடை அமைப்பு, ஒட்டு மொத்த நிர்வாகம் எனப் பல பொறுப்புகளையும் ஏற்று இசை மற்றும் நாட்டிய நாடகங்களையும் இவர் மேடையேற்றி வருகிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, கம்பராமாயண வகுப்புகளையும் வாரம் தோறும் வரதராசன் நடத்தி வருகிறார்.
A. K. Varadharajan
Born in 1944 in Tamil Nadu, A. K. Varadharajan came to Singapore in 1982, and has been a Singapore citizen for the past 25 years. His traditional poetry books have received many prizes. He has studied and written books about Kamban, and his award-winning books have been launched at Kamban events hosted by Kamban Clubs in Tamil Nadu. He regularly stages music and dance dramas, directing, composing lyrics, building stages, and doing administrative work, and he conducts weekly Kambaramayana classes.