சிங்கப்பூர்-மலேசியா: தமிழ் இலக்கியத் தடம் சில திருப்பம்
ஒன்பது கட்டுரைகள் மற்றும் ஆறு நேர்காணல்கள் மூலம், சிங்கப்பூர் மற்றும் மலாயாவின் தமிழ் பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் பயணம் மற்றும் அவர்களின் படைப்புகளைப் பற்றி, இந்த புத்தகம் சொல்கிறது. இரண்டாம் உலகப் போரும் அதன் ஜப்பானிய ஆக்கிரமிப்பும் நமது எழுத்துப் பாதையை எவ்வாறு திருப்பியது என்பதையும், ஜப்பானிய ஆட்சியின் கீழ், சிங்கப்பூரில் எழுதப்பட்ட இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டத்தின் ஏராளமான தமிழ் சிறுகதைகளுடன், பிரிட்டிஷ் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு கோலாலம்பூரில் வெளியிடப்பட்டதையும் இது ஆராய்கிறது. நாராயணரின் இலக்கியப் படைப்பின் முதல் முழு சித்தரிப்பு இதுவாகும்.
Singapore-Malaysia : A History of Tamil Literature - Some Turning Points
Through nine essays and six interviews, this book chronicles the works and lives of Singapore and Malaya’s Tamil writers and journalists. It explores how World War II and Japanese aggression turned our writing trajectory around, and examines banned books that were translated to Tamil and published in Kuala Lumpur, alongside numerous Tamil short stories that were written in Singapore during the Japanese occupation describing India’s fight for independence. It is the first full depiction of the literary work of Narayanar.
SELF-PUBLISHED
2018
2018
ABOUT THE AUTHOR
சுப்ரமணியன் பாலபாஸ்கரன்
சுப்ரமணியன் பாலபாஸ்கரன் ஒலிபரப்பாளர், பத்திரிகையாளர், ஆய்வாளர் என்று பல பரிமாணங்கள் கொண்டவர். மலாயாப் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர். ஐந்து நூல்களின் ஆசிரியர். அவற்றுள் இரண்டு ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. ஆங்கிலம், தமிழ், மலாய் மொழிகளில் பல கட்டுரைகள் எழுதியவர். “ கோ. சாரங்கபாணியும் தமிழ் முரசும் : இன்றைய பார்வை” எனும் ஆய்வு நூலுக்கு 2018 சிங்கப்பூர் இலக்கியப் பரிசு வென்றவர். கவிமாலை அமைப்பின் கணையாழி விருது, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்– சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை இணைந்து வழங்கிய கரிகாலன் விருது வாங்கியவர்.
Subramanian Balabaskaran
Subramanian Balabaskaran is a broadcaster, journalist, researcher, and a former lecturer at the University of Malaya. He is author of five books, including two in English, and writer of numerous articles in English, Tamil, and Malay. He won the Singapore Literature Prize for Non-Fiction in 2018, and received the Kanaiyaazhi (Gold Ring) award from literary group Kavimaalai as well as the Karikaalan Award from the Tamil University at Tanjore.