தங்கமுனைத் தருணங்கள்

தங்க முனை விருது 2021-ன் தமிழ் மொழி வெற்றியாளர்கள் தங்களது எழுத்துப் பயணத்தைப் பற்றி பகிர்ந்து கொள்வார்கள். அவர்களுக்கு ஊக்கமளித்த படைப்புகளை அல்லது எழுத்தாளர்களை முன்னிலைப்படுத்தி, தங்களுக்கான இலக்கிய வெளியை எவ்வாறு கண்டறிந்தனர் என்பதை எடுத்துரைப்பார்கள். இந்த அங்கம் நெப்போலியனால் வழிநடத்தப்படும்.

16 April 2022

In-person at The Arts House

ஏற்பாட்டாளர்:

Singapore Book Council

பொறுப்புரிமையாளர்:

Sing Lit: Read Our World

ஆதரவாளர்:

National Arts Council

இடம் ஆதரவாளர்:

The Arts House

Versions:

தங்கமுனை விருது 2021 வெற்றியாளர்கள் சிலருடன், அவர்களது வெற்றிப் படைப்பின் பகிர்தலும் அதனைப் பற்றிய அரங்கக் கலந்துரையாடலும். கவிதை, சிறுகதை என தங்கள் படைப்பின் பாதையில் தங்கமுனை அங்கீகாரம் மேலும் அவர்களை நகர்த்திச் செல்லும் அடுத்தகட்ட உற்சாகம். தம் படைப்பிற்கான ஆரம்ப உந்துதல் மற்றும் வாசிப்பின் மறுக்க முடியா பயன். படைப்பின் கருப்பொருட்களை தாங்கள் கண்டடையும் கணம், பிறகு எழுத்தாய் உருமாறும் பொறுப்பு. அவசர உலகில் இலக்கிய மகிழ்வு. முதல் எழுத்தின் நினைவோடை. சிங்கப்பூர் தமிழ் இலக்கியப் பாதையில் தங்கள் படைப்பின் தொடக்கம்என அரங்கக் கலந்துரையாடல். நிகழ்ச்சி - வடிவமும் வழி நடத்தலும் சிங்கப்பூரின் பிரபல எழுத்தாளரும் கவிஞருமான நெப்போலியன்.

 

நிகழ்ச்சியில் பங்கேற்போர்:

ஹேமலதா
Hemalatha

ஜெய்குமார் பிரியா
Jaikumar Priya

ச. மோகனப்ரியா
C. Mohanapriya

சர்வான் ( கூத்தப்பெருமாள் சரவணப்பெருமாள் )
Sarwaan ( Koothaperumal Saravanaperumal )

தமிழ்ச்செல்வி இராஜராஜன்
Tamilselvi Rajarajan

சு வெங்கட்ரமணி
S Venkatramani (Venki)

 

 

 

நெப்போலியன்